Summer Beauty Tips

June 15, 2009 by kavitha  
Filed under BEAUTYTIPS, HEALTH, TAMIL

சம்மரில் சருமம் பாதுகாப்பது எப்படி?

வெயில் நாட்களில் மூன்று நாட்களுக்கொருமுறை நல்லெண்ணெயை தலைமுதல் பாதம் வரை தேயத்துக் கொள்ளவும். பின் பாதங்களில் நல்லெண்ணெய் தடவி நன்றாக தேய்ததபின் 20 நிமிடங்கள் ஊறவைத்து குளிக்கவும். சருமம் எப்போதும் ஈரப்பதமுடன் இருக்கும்.

Summer Beauty Tips

வெள்ளரிக்காயை மிக்ஸியில் குழைய அரைத்து கண்களுக்குக் கீழ், இமைகளுக்கு மேல் என, முகத்தின் எல்லா இடங்களிலும் தடவி 20 நிமிடம் கழித்து முகம் கழுவவும். இப்படிச் செய்தால் வெயிலால் கறுத்த சருமம் பழைய நிலைக்கு திரும்பும்.

பச்சரிசி மாவு ஒரு டீஸ்பூன், கடலை மாவு ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு தேவையான தயிரையும் சேர்த்து நன்கு தளர குழைத்துக் கொள்ளவும். இந்த பேஸ்ட்டை முகத்தில் தடவி நன்கு காய்ந்தவுடன் முகத்ததைக் கழுவினால், தகதகவென முகம் ஜொலிக்கும். சர்ம அழகை பாதுகாப்பதில் தயிர் நம் வீட்டு சமையலரையில் இருக்கும் ஒரு ஏஞ்சல்!.

வியர்வை நாற்றம் வாராமலிருக்க

கஸ்தூரி மஞ்சள்பொடி – 20 கிராம்.
வேப்பங்கொழுந்துப்பொடி – 20 கிராம்.
சந்தனம் – 5 கிராம்.

மூன்றையும் ரோஸ் வாட்டரில் குழைத்து குளிப்பதற்கு முன் உடல் முழுக்க தடவி 5 நிமிடங்கள் ஊறவைத்துப் பின்பு குளிக்கவும்.

உங்களுடைய குறிப்புகள் மற்றும் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துக்கொள்ளுங்கள்.

- திருமதி கவிதா

Comments

Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!