Rajasekhara Reddy Died
ஆந்திர முதலமைச்சர் ராஜசேகர ரெட்டி மரணம்
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான பகுதியில் இருந்து ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டியின் உடல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனத் ஆந்திர அரசு தகவல்கள் தெரிவிக்கின்றன.
மாயமான ஹெலிகாப்டரை தேடும் பணி இன்று காலை துவங்கிய சிறிது நேரத்தில் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டர் சிதலமடைந்த நிலையில் இந்திய விமானப் படையினர் கண்டுபிடித்தனர்.
இன்று காலை 10.00 மணியளவில் நல்லமலா வனப்பகுதியில் முதல்வர் ராஜசேகர ரெட்டி உட்பட 5 பேரின் உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. இதனைப் பிரதமர் அலுவலகமும் உறுதி செய்துள்ளது.
தமிழகத்தில் நாளை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் கருணாநிதி வெளியிட்டுள்ள அறிக்கையில், ஆந்திர மாநில முதலமைச்சர் ஒய்.எஸ்.ராஜசேகர ரெட்டி இன்று விமான விபத்தில் மறைந்தார் என்ற செய்தி கேட்டு, தமிழக மக்கள் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.
இந்த துயரத்தில் தமிழகம் முழுவதும் பங்கு பெறுகிறது என்பதற்கு அடையாளமாக நாளைய தினம் (04.9.2009) தமிழக அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள் ஆகிய அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்படுகிறது” என்று கூறியுள்ளார்.
ராஜசேகர ரெட்டியின் உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள் நாளை ஐதராபாத் வரவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.












Comments
Tell us what you're thinking...
and oh, if you want a pic to show with your comment, go get a gravatar!